Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் வன உயிரியல் பூங்கா ஓராண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் அமைச்சர் தகவல்

வன விலங்குகளால் வேளாண் பயிர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாகவும், அவற்றிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பது எப்படி என திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்ட விவசாயிகள், பொதுமக்களுடன் கருத்துக்கேட்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தமிழக வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு மரக்கன்றுகள் மற்றும் கிராம குழுவினருக்கு சுழற்சி கடன் மகளிர் சுய உதவி குழுவினருக்கும் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில்….. வனப்பகுதியில் இருந்து வயல்வெளி பகுதிக்கு யானைகள் வராமல் இருக்க பழைய முறைப்படி 8 அடி ஆழம், 8 அடி அகலத்திற்கு அகழி வெட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் யானை மட்டுமின்றி இதர மிருகங்களும் வருவது தடுக்கப்படும். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் நிலத்தடி நீர் உயரும். விரைவில் இத்திட்டம் கொண்டு வரப்படும். மயில்களால் பயிர்களுக்கு பாதிப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். அவற்றுக்கென சரணாலயம் அமைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனவே இது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆராய்ந்து எந்த அளவில் சாத்தியப்படும் என கலந்து ஆலோசனை செய்து பின்னர் சரணாலயம் அமைப்பதற்கான திட்டத்தை நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தமிழகத்தில் தற்போதைய நிலையில் 23.98% வனப்பகுதி உள்ளது.

இதனை உயர்த்த தமிழக முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஆண்டுக்கு 2.5 கோடி மரக்கன்றுகள் அனைத்து துறைகள் மூலம் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.திருச்சி எம் ஆர் பாளையம் வன உயிரியல் பூங்கா இன்னும் ஓராண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *