பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதிகளில் திமுக வேட்பாளர் அருண் நேரு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று (புதன்கிழமை) காலை கொசூர் பகுதியில் இருந்து பிரச்சாரம் துவங்கியபோது, நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தனது மகன் அருண் நேருவுக்காக வாக்கு சேகரித்தார்.
அப்போது “எனக்கு மயக்கமாக இருக்கிறது. ஒரு வரி மட்டும் பேசிவிட்டு கிளம்புறேன்” என்று கூறிய அமைச்சர் கே.என்.நேரு, “எனது துறையின் கீழ் வரும் குடிநீர் வாரிய பிரச்சினைகளை இப்பகுதியில் கண்டிப்பாக தீர்த்து வைப்பேன்” எனத் தெரிவித்து முடித்துக்கொண்டு பிரச்சார வாகனத்திலிருந்து கீழே இறங்கி தனது காரில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றார்.
இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்துள்ளார். தற்பொழுது தில்லைநகர் இல்லத்தில் அவர் ஓய்வெடுத்து வருகிறார். அங்கே அவருக்கு குளுக்கோஸ் உடலில் ஏற்றப்பட்டு வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments