திருச்சி: நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள காந்தி நகரில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நிவாரணம் மற்றும் உனவுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்கவும் வாய்க்கால்களிலிருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்கவும் நிரந்தர தீர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதிக அளவு மழை பெய்யும் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.கடந்த பத்தாண்டு காலம் அ.தி.மு.க ஆட்சியில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது தான் இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட காரணம் என கூறினார்,,..
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், நகர பொறியாளர் அமுதவல்லி, நகர செயற்பொறியாளர் சிவபாதம், மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments