Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ரூபாய் 24.04 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

திருச்சி மாவட்டம் இலால்குடி 10.030 ச.கி.மீ பரப்பளவினைக் கொண்ட பகுதியாகும். இந்நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகையானது 23740 ஆகும். தற்போது 2023-ம் ஆண்டு மக்கள் தொகை தோராயமாக 36219 மற்றும் குடியிருப்புகள் 8859 ஆக உள்ளது. இந்நகராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வரும் மொத்த சாலைகளின் நீளம் 45.796 கி.மீ மற்றும் 17.367 கி.மீ மழைநீர் வடிகாலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இலால்குடி நகரம் திருச்சி-அரியலூர் மாநில நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக உள்ளது. இலால்குடி நகராட்சியை சுற்றி சுமார் 25 கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் உள்ள மக்கள் அவர்களின் அன்றாட தேவைக்காக இலால்குடி நகரை அணுகுவது அத்தியாவசியமாக உள்ளது. 

இலால்குடி நகரில் 18 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியிலிருந்து அரியலூர், ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம், மதுரை, தஞ்சாவூர் நகருக்கு செல்லும் புறநகர் பேருந்துகள் 140 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தற்பொழுது உள்ள பேருந்து நிலையம் நகர பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும் நிலையில் உள்ளது. புற நகர் பேருந்துகள் தற்போதைய பேருந்து நிலையத்தில் இடவசதி இல்லாததால் பேருந்து நிலையத்திற்கு செல்லாமலே புறவழியாகவே செல்வதால் நகராட்சியின் வருமானம் பாதிக்கப்படுவதுடன் பொது மக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகிறார்கள். 

ஆகையால் இலால்குடி நகராட்சிக்கு ரூ.24.04 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையம் 40 பேருந்து நிறுத்தங்கள் 120 கடைகள் 2 உணவகம், 2 ATM, 1 டிரைவர் தங்குமிடம், இரண்டு சக்கர வாகன நிறுத்துமிடம், இதர அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி 5.32 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக கட்டப்பட உள்ளது.

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதிதாக அமையவுள்ள பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.ஜமுன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் அன்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறக்கப்பட்ட புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் நேரில் சென்று அலுவலகக் கட்டிடம் மற்றும் வளாகத்தினை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் , பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா, நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் தானுமூர்த்தி, செயற்பொறியாளர் பார்தீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, இலால்குடி நகர் மன்ற தலைவர் துரை மாணிக்கம், ஆணையர் குமார் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், இலால்குடி ஒன்றியக்குழுத்தலைவர் ரவிச்சந்திரன், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *