திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி, மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு பாலாஜி நகர், நியூடவுன் பொதுமக்களின் 20 ஆண்டுகள் கோரிக்கையை ஏற்று 39 மற்றும் 40வது வார்டுகளை இணைக்கும் பாலம் ரூபாய் 1.31 இலட்சம் நிதி மதிப்பீட்டில் அமைப்பதற்காக அரசிடமிருந்து பெற்று பாலம் அமைக்கும் பணியை
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யா மொழி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மண்டலம் மூன்றின் தலைவர் மற்றும் மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், நீலமேகம், ரெக்ஸ்,
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் நலச்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments