Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது குறித்து கேள்விக்கு சிரித்துக் கொண்டே சென்ற அமைச்சர் மகேஸ்

தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபை கல்வி கழகம் சார்பில் ஆசிரியர்களுக்கான கல்வித்திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றியதுடன் நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கி வாழ்த்தினார்.

மேடையில் பேசிய மகேஸ்….எந்த சமயமாக இருந்தாலும் அனைவரையும் ஒண்றிணைப்பது தமிழ் தான், சுமார் இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் என்னுடைய துறையைச் சார்ந்த அரசு ஊழியர்கள் தான் உள்ளார்கள், ஆசிரியர்களிடமிருந்து வரும் பாராட்டுகளாக இருந்தாலும் சரி விமர்சனங்களாக இருந்தாலும் அதனை ரசிக்கக் கூடியவர்கள் நாங்கள்.

அவ்வாறு பாராட்டும் போதும் விமர்சனம் செய்யும் போதும் உங்களிடத்தில் தமிழ் விளையாடும். உங்கள் இடத்தில் உள்ள எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை, நல்ல அரசாங்கத்தையும் நல்ல முதல்வரையும் தந்த கடலுக்கு நன்றி என வழிபாட்டு செய்தலின் போது கூறுகையில் எங்களுக்கு இந்த இடத்தை வழங்கியது சிறுபான்மை மக்கள் உங்களுடைய பங்கு தான் அதிகம் என்பதை என்றைக்கும் நாங்கள் நினைவு கூற விரும்புகிறோம்.

தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் கூட தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டியது அவசியம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனான கூட்டத்தில் சிறுபான்மை பள்ளிகள் அளிக்கும் கோரிக்கைகளை, உதவிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மகேஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது…. பாட புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்வது குறித்து நேஷனல் சிலபஸ் டீச்சிங் கமிட்டி மூலம் உயர்மட்டகுழு அறிவிப்பு செய்துள்ளது என்சிஆர்டி இதனை ஏற்றுக் கொண்டார்களா என தெரியவில்லை. மாநில கல்வி கொள்கை நமக்கென இருக்கிறபட்சத்தில், நமக்கு என்ன தேவை என்பதை நாம் முடிவு எடுத்துக் கொள்வோம் என்றார்.

சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆட்சியைக் கலைப்போம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது குறித்து கேள்விக்கு சிரித்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *