திருச்சி ஸ்ரீரங்கம் 2 வார்டில் போட்டியிடும் கோவிந்தனை ஆதரித்து பாஜக எச்.ராஜா திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது திமுக அமைச்சர் கே.என்.நேரு அப்பகுதிக்கு வந்த போது பாரதிய ஜனதா எச்.ராஜாவும் கே.என்.நேருவும் ஒருவரை ஒருவர் மாறி நலம் விசாரித்து வாக்கு சேகரித்தனர்.
இரண்டு கட்சிகளுக்கும் கொள்கைரீதியாக முரண்பாடுகள் இருந்தாலும் அரசியல் ரீதியாக இருவரும் வெவ்வேறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் களத்தில் மக்களை சந்திக்கும் பொழுது ஒருவரையொருவர் பரஸ்பரம் நலம் விசாரித்தது இரு கட்சியினர் மத்தியில் தேர்தல் பரபரப்பில் சிறிய ரிலாக்ஸாக அமைந்தது என்கின்றனர். எதிர்எதிர் துருவங்கள் நேருக்கு நேர் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments