பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.
பள்ளியில் மாணவர்களுக்கு செயற்கை விண்ணப்பம் வழங்கி என்ன பாடப்பிரிவு வேண்டும். வேண்டுகிற பாடப்பிரிவு கிடைக்கிறதா எவ்வளவு கட்டணம் என்பது போன்ற விவரங்களையும், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதா? என்று தலைமையாசிரியரிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
மாணவர்களுக்கு பாடப்பிரிவு எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சுயநிதி பாட பிரிவுகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது போன்றவற்றை கேட்டறிந்தார். பின்னர் ஆசிரியர்களிடம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனரா
என கேட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அடுத்து திருச்சி மரக்கடை சையது முதர்ஷா மேல்நிலைப் பள்ளிக்கு சென்று அங்கு மாணவர்கள் சேர்க்கை நடைமுறையைும், பள்ளியில் உள்கட்டமைப்பு கழிவறை போன்றவற்றை நேரில் ஆய்வு செய்தார். மேலும் அங்கு நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆய்வு செய்து அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து திருச்சி ஏர்போர்ட் (Abbot Marcel R C Higher Secondary School) ஆபர்ட் மார்சல் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் சேர்க்கை குறித்தும் எத்தனை ஆசிரியர்கள் பணி செய்கின்றனர் என்பதையும் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அதிகாரி பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments