இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அல்லூர் பாரதி துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு மேற்கொண்டார். அல்லூரில் அரசு உதவி பெறும் பாரதி தொடக்கப்பள்ளியில் அமைச்சர் உதயநிதி 20 மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார் மாணவர்களுடன் உணவு தரம் குறித்தும் உரையாடினார். பின்னர் துறையூர் வட்டம், தென்புறநாடு ஊராட்சி, புத்தூர் குக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பாக ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பயனாளிகளுடன் கலந்துரையாட உள்ளார்.
கோம்பை கிராமம், சின்ன இலுப்பூரில் திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகம் (NIT) தேர்வாகியுள்ள பழங்குடியின மாணவி ரோகிணியை சந்தித்து பாராட்டுகிறார். மாலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். முன்னதாக திருச்சி குடமுருட்டி பாலம் அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்காவை அமைச்சர்கள் உதயநிதி, நேரு, மகேஸ் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments