தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுவீடன் நாட்டில் உள்ள Language Centre என அழைக்கப்படும் தாய்மொழிக் கற்பித்தல் மையத்தைப் பார்வையிட்டார்.
பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் சுவீடன் நாட்டில் வசிக்கிறார்கள். இவர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கல்விக் கற்பிக்கப்பட வேண்டும் எனும் உயரிய நோக்கத்தில் இந்த Language Centre செயல்படுகிறது.
தங்களின் மொழிக்கு மட்டுமல்லாமல் தங்கள் நாட்டு குடிமக்கள் பேசும் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இத்திட்டத்தை மனம் நெகிழ்ந்து பாராட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாய்மொழியில் கல்விப் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் வழங்கும் முன்னுரிமை போன்ற திட்டங்கள் குறித்தும் சுவீடன் நாட்டு அரசு அலுவலர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments