சென்னையிலிருந்து திண்டுக்கல் சென்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு போக்குவரத்து பணிமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது பணிமனையின் கட்டடங்களின் தன்மை குறித்தும், கழிவறை, குடிநீர், ஓட்டுனர், நடத்துனர் ஓய்வு அறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவற்றிலுள்ள பழுதுகளை நீக்கவும் பணிமனை மேலாளருக்கு அறிவுறுத்தினார்.
பேருந்துகளில் மாணவ, மாணவியர்கள் பாதுகாப்புடன் சென்று வரும் வகையில் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், மகளிர் இலவச பேருந்து பயணம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது அவை தொடரும் எனவும்,
கடற்கரை சாலை வழி போக்குவரத்தில் மக்களின் பாதுகாப்பினை கருதில் கொண்டே சில மணி நேர போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் தனியார் பேருந்துகள் இயக்கும் என்பது அவர்களின் முடிவாகும் என தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments