திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (09.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பணிகளை விரைவாகவும், சிறப்பான முறையில் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், நகரப் பொறியாளர் சிவபாதம், அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments