Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு பெட்டகத்தை வழங்கிய அமைச்சர்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலம் பேணினால் மட்டுமே, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த முடியும் என்னும் நோக்கத்தோடு முதலமைச்சர்,  விதி110-ன் கீழான சட்டப்பேரவை அறிவித்தார்.

தொடர்ந்து ‘ஊட்டச்சத்தை உறுதி செய்” என்னும் திட்டத்தின் முதற்கட்ட நிகழ்வானது 2022ம் ஆண்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தமிழக முதலமைச்சர் அரியலுார் மாவட்டத்தில் துவங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டத்தில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் கண்காணிப்பு செய்ததில் 6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி அடிப்படையில் அக்டோபர் மாதம் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 676 குழந்தைகளும், மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய 1352 குழந்தைகளும் கண்டறியப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ‘ஊட்டச்சத்தை உறுதி செய்” என்னும் திட்டத்தின் சார்பாக திருச்சி மாவட்டத்தில் உறையூர் வட்டாரத்தில் மருந்தகம் குழந்தைகள் மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் 0 முதல் 6 மாதமுடைய கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு 2-ஊட்டச்சத்து பெட்டகமும்,

மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு 1-ஊட்டச்சத்து பெட்டகம் என்ற திட்டத்தின் கீழ், Protein Powder-2bottle, Iron Syrub-3bottle, -2box, Ghee-500gram, Towel-1, Cup-1 மேற்காணும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தினை நிருவாகத்துறை அமைச்சர் 50 பாலுாட்டும் தாய்மார்களுக்கு வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார் .

கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள ஒவ்வொரு குழந்தையும் இத்திரைப்படத்தில் அங்கன்வாடி பணியாளரால் தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு எவரொருவரும் விடுபடாமல் நல்ல நிலையை அடையும் வரை கண்காணிக்கப்பட வேண்டுமெனவும், தமிழக அரசு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் துவங்கப்பட்ட இத்திட்டத்தினை பெற்றோர்கள் கவனமாக கையாண்டு ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை ஊட்டச்சத்து நிலையினை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டுமெனவும் பெற்றோர்களிடம் எடுத்துரைத்தாார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, மாவட்ட சமூகநல அலுவலர் விஜயலெட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நித்யா, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் ஆறு மாத குழந்தை மற்றும் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தமிழக முதல்வர் சிறிய ஏற்பாட்டில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை தறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் சார்பாக துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட வடக்கு மலை பகுதியில்

புதிதாக அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சுமார் 150 குழந்தைகளின் தாய்மார்கள் மூலம் அரசு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. 

இதில் கடுமையாக எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இரண்டு ஊட்டச்சத்து பெட்டகமும் மீதமுள்ள 94 குழந்தைகளுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் துவாக்குடி நகர் மன்ற தலைவர் காயம்பு, மாவட்ட திட்ட அலுவலர் நித்தியா மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, குழந்தை வளர்ச்சி வட்டார அலுவலர் சாய்ராபானு உட்பட ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *