திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் பிரேம் ஆனந்த் (46) என்பவர் கடந்த இருபது வருடமாக ஈஸ்வரி என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடைக்குப் பின்புறம் இவருடைய வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் வீட்டின் மாடிப்படியில் மராமத்து பணிகள் செய்து கொண்டிருந்ததனர்.
அப்போது வெல்டிங் வைத்தபோது அதிலிருந்து ஏற்பட்ட தீப்பொறி மற்றும் மின்கசிவு காரணமாக மளிகை கடை் தீப்பற்றியது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். கண்ணாடி பாட்டில்கள் வெடித்து சிதறியதால் பக்கத்தில் யாரும் நெருங்க முடியவில்லை. அதற்குள் தீ மளமளவென பரவ ஆரம்பித்தது.
இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து ஸ்ரீரங்கம், லால்குடி மற்றும் சமயபுரம் ஆகிய மூன்று தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அனைத்தனர். தீயை அணைப்பதற்குள் கடையில் இருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய்கள் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
இந்த தீ விபத்து குறித்து லால்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி – சிதம்பரம் சாலையோரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments