காரைக்காலில் இருந்து திருச்சி வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் குளித்தலை கரூர் இடையே சென்று கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர்கள் ரயில் மீது கல்வீசி உள்ளனர். அப்போது ரயிலில் பயணம் செய்த பயணிக்கு தலைக்கு கீழே காயம் ஏற்பட்டது.
கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்க்கு மருத்துவமனைக்கு வர அழைத்தனர். நான் ஊருக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வதாக சொல்லி மீண்டும் அந்த ரயிலில் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எர்ணாகுளம் விரைவு ரயில் தாமதமின்றி தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. காயமடைந்த பயணியின் பெயர் நித்தின் தஞ்சையில் இருந்து கேரளா செல்லக்கூடியவர் என்பது முதற்கட்ட தகவல்.
கோழிக்கோடு சேர்ந்த நித்தினுக்கு திருச்சி ரயில்வே இருப்பு பாதை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமை உத்தரவின் பேரில் ரயில்வே போலீசாரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த பணியை அனுப்பி வைத்தனர். அவர் புகார் ஏதும் தர மறுத்ததால் அவருடைய பயணத்தை தொடருகிறார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments