திருச்சி மாவட்டம் நொச்சியம் பகுதியில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில் உள்ள அத்தாணி பேருந்து நிறுத்தம் அருகே SJDT என்ற பெயரில் பர்னிச்சர் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பர்னிச்சர் கடை பின்புறம் ஒரு ஏக்கர் பரப்பளவில் முள்புதர் இருந்துள்ளது. அவ்வழியாக சென்ற மர்ம நபர் முள் புதருக்கு தீ வைத்துள்ளார்.
இதனால் தீ மளமளவென பரவி முள் புதர்கள் முற்றிலும் எரிந்தது. மேலும், மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் புகை மூட்டம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு சமயபுரம் தீயணைப்பு அலுவலர் முத்துக்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் SJDT பேர் கொண்ட பர்னிச்சர் கடையில் உள்ள 10 லட்சம் மதிப்புள்ள மரங்கள் கட்டைகள் அதிர்ஷ்டவசமாக தீயில் தப்பியது. இந்த தீ விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் முள் புதருக்கு தீ வைத்த மர்ம நபரை வலை வீசி தேடி வருகிறார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments