Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

காணாமல் போன சிறுவன்! கண்டுபிடித்த திருச்சி காவலர்!! குவியும் பாராட்டுக்கள்!!!

திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 8ம் தேதி 4 மணிக்கு ஜான் அகஸ்டின் என்பவரது 13 வயது மகன் சென்னை பைபாஸ் டி-மார்ட் அருகே இருந்து கோபித்துக்கொண்டு சென்றுள்ளார்.

தகவலையடுத்து உடனடியாக மேற்படி சிறுவனின் புகைப்படம் மற்றும் அவரது விபரங்களை சமூக ஊடகத்தில் தகவல் அனுப்பியும், தனிப்படை அமைத்தும் தேடி வந்த நிலையில் மேற்படி காணாமல் போன சிறுவன் திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொணலை பகுதியில் உள்ள ஹோட்டல் அருகில் நின்றுகொண்டிருந்திருக்கிறார்.

அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த சிறுகனூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் ஆ.ராஜா என்பவர் கண்டறிந்து அவரிடம் பேசியும், உணவு வாங்கிகொடுத்தும் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, மேற்படி சிறுவன் காணாமல் போன தகவல் காவலர்களின் சமூக ஊடகத்தில் பார்த்து திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

இந்நிலையில் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து அவர்களிடம் அச்சிறுவன் ஒப்படைத்தனர். வழி தெரியாமல் சுற்றி திரிந்த சிறுவனுக்கு ஆதரவு அளித்து உணவும் அளித்து சமூக வலைத்தள தகவலின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட முதல் நிலை காவலர் ராஜா என்பவருக்கு திருச்சி விஷன் இணையதளம் சார்பாக வாழ்த்துக்கள்.

மேலும் இச்செயலினை திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் வெகுவாக பாராட்டினார்கள்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *