திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி சார்ந்த மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை, வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்று வாக்காளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இருந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்த ஒரு நிவாரணம் பொருட்களும் வழங்காமல், மாங்காய் கொடுத்ததாக இன்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது மக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். தற்போது மீண்டும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இருக்கு அதிமுகவில் வழங்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் ஊருக்குள் நுழைய விடாதபடி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து விரட்டி அடித்து வருகின்றனர்.
இன்று மாலையுடன் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்து, ஆறாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதிமுக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஐ கடந்த 16.5.2016 ஆம் தேதி முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஐந்து வருட காலங்களாக கிழக்கு தொகுதியில் எங்கு தேடியும் காணவில்லை என்று திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட ஏர்போர்ட், கொட்டப்பட்டு, குட்செட் ரோடு, பருப்பு கார தெரு, எடத்தெரு, வரகனேரி மற்றும் ஜிபி ரோடு என கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைச்சர் வெல்லமண்டி நடராஜனால் தொகுதி பக்கம் செல்ல முடியாத நிலையில், ஏற்கனவே தோல்வி உறுதியான நிலையில் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments