Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

அம்மா என்கிற பெயரை கேட்டாலே மு.க.ஸ்டாலினுக்கு அலர்ஜி ஆகி விடுகிறது – திருச்சியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

வீட்டு வரி மற்றும் சொத்து வரியை உயர்த்திய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர்… ஸ்டாலின் மத்திய அரசு தான் வீட்டு வரியை உயர்த்த சொல்லி உள்ளது என்கிறார் – அப்படி எங்கும் மத்திய அரசு குறிப்பிடவில்லை. வீண் பழியை போட்டு ஏமாற்ற பார்க்கின்றனர். டெல்லியில் வரி விலக்கு பலருக்கு உள்ளது. ஏன் டெல்லியை ஒப்பிட்டு பேச மறுத்து வருகின்றீர்கள். இந்தியாவிலேயே தேர்தல் அறிக்கையை புக்கு போட்டு வெளியிட்ட கட்சி திமுக தான். 487வது அறிவிப்பில் நீங்கள் தெரிவித்தது சொத்து வரி உயர்த்தப்படாது என்று. நீங்களே கொரோனா காலத்தில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று கூறி விட்டு தற்போது சொத்து வரியை உயர்த்தி உள்ளனர்.

தொலை நோக்கு திட்டம் தாலிக்கு தங்கம் என்கிற அற்புதமான திட்டம். பல லட்சம் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இதனால் பலன் அடைந்தார்கள். திருமண உதவி திட்டம் எண்ணற்ற பலன்களை மக்களுக்கு கொடுத்தது – இதை போய் நிறுத்தி விட்டீர்களே? 11 மாதத்தில் நீ என்ன திட்டத்தை கொண்டு வந்தாய் – நான் கொண்டு வந்த திட்டத்திற்கு எல்லாம் நீ ரிப்பன் கட் பன்னி வருகிறாய். நாம் பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைத்து வருகிறார். 10 மாதத்தில் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் என்ன ? ஊர் ஊராக சென்று தின்னையில் படுதாவை போட்டு பெட்டியில் குறைகளை போடுங்கள் என்றும் அப்படி கோரிக்கை நிறைவேவில்லை என்றால் நேரில் வந்து பாருங்கள் என்றார் – இது வரை எவ்வளவு பெயரை நீங்கள் சந்தித்து உள்ளீர்கள் ?

சிறப்பு முகாமை ஏற்படுத்தி 9.45 லட்சம் மனுக்களை பெற்றோம் – இதில் 5 லட்சத்திற்கும் அதிகமான மனுக்களுக்கு தீர்வு கண்டோம். ஸ்டாலின் இன்ப சுற்றுலா சென்று வந்தார். திமுக கட்சி தொண்டர்கள் பனத்தில் ஏன் அரசுஅதிகாரிகள் துபாய் செல்ல வேண்டும் ? துபாய் சர்வதேச கண்காட்சி 10வது மாதமே துவங்கி விட்டது. முடிய 6 நாள் இருக்க நம் முதல்வர் சென்று புதிய அரங்கை திறந்து வைக்கிறார்.

10 மாதமாக கொள்ளை அடித்த பணத்தை வைத்து துபாயில் முதலீடு செய்ய தான் ஸ்டாலின் சென்றார். இந்த ஆர்பாட்டத்தின் நோக்கம் மக்கள் இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இந்த நேரத்தில் இந்த விடியா அரசு 150% சொத்து வரியை உயர்த்தி உள்ளது.

மக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் இப்படி வரியை உயர்த்தி உள்ளது. இது கண்டனத்துக்கு உரியது. ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலை இல்லாமல் அவரது வீட்டு மக்களை பற்றி தான் கவலைப்பட்டு கொண்டு உள்ளார்.

வேலை இல்லாமல் – வாழ்வாதராமே இல்லாத நிலையில் மக்கள் உள்ள நிலையில்  இந்த வரியை உயர்த்தி உள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் உள்ள மாநிலம் தமிழகம் என்று நல்ல பெயரை அதிமுக ஆட்சியில் பெற்று தந்தோம். 52 லட்சம் மானவர்களுக்கு
மடிக்கணினிகளை வழங்கினோம். ஏழை மாணவர்களுக்கு பலன் அளிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்ய முயற்சி செய்கிறீர்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டபேரவை தேர்தல் வந்தாலும் வரலாம். பிரதமரே கூறி உள்ளார்.  ஒரே நாடு ஒரே தேர்தல் என்று, அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

எனவே கிடைத்த வாய்பை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய பாருங்கள். மக்கள் இப்படியே கடந்து சென்று விடுவார்கள் என்று என்னி விடாதீர்கள். மிக பெரிய போராட்டத்தை மக்கள் நடத்த போகிறார்கள் – இதனை எச்சரிக்கையாக கூறி கொள்ள விரும்புகிறேன். கதவனை கட்ட நாங்கள் நடவடிக்கை எடுத்தோம் அதையும் கைவிட்டு விட்டார்கள். என்னென்ன நல்ல திட்டங்களை எல்லாம் நாம் கொண்டு வந்துள்ளோமோ அதை எல்லாம் கை விட்டு விட்டீர்கள்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, காவல் துறை செயல் இழந்து விட்டது. ஆன்லைன் ரம்மியை தடை செய்வோம் என அறிவித்தார் – கண்டிப்பாக இதனை தடை செய்ய வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதனை எல்லாம் செய்யவில்லை என்றால் எதிர்காலமே திமுகவிற்கு இருக்காது. திராவிட மாடல் இது தானா ? அம்மா மினி கிளினீக் இப்போது மூடி விட்டார்கள் – அம்மா என்கிற பெயரை கேட்டாலே ஸ்டாலினுக்கு அலர்ஜி ஆகி விடுகிறது. மின் வெட்டு இப்போது தான் ஆரமித்து உள்ளது. இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த துன்பமும் இல்லை என்கிறார் ஆட்சி இருப்பதே துன்பம் தான் என உரையாற்றினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *