திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துளையாநத்தம், மற்றும் மங்கலம் ஊராட்சி பகுதிகளில் கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் பதித்த ஏழை,எளியோருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி,காய்கறிகள், சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் என ரூ. 5 லட்சம் மதிப்பில் 400 க்கும் மேற்பட்டோருக்கு மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் தனது சொந்த செலவில் வழங்கினார்.
மேலும் மங்கலம் ஊராட்சியில் அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் எம்எல்ஏ கதிரவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.இந்நிகழ்வில் திமுக கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC
Comments