திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, அம்பேத்கர் நகரில் உள்ள நவீன எரிவாயு தகன மையம் 24.04.2025 முதல் 03.05.2025 வரை 10 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது.
அம்பேத்கர் நகரில் உடல்களை எரியுட்டுவதற்காக நவீன தகன மேடை உள்ளன. இந்த தகன மேடைகளில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை சரி செய்யும் பணி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக 24.04.2025 முதல் 03.05.2025 வரை 10 நாட்களுக்கு உடல்களை எரியுட்ட இயலாது என்பதால் அம்பேத்கர் நகரில் உள்ள நவீன எரிவாயு தகன மையம் செயல்படாது என்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அவர்களால் அறிவித்துள்ளார். மேலும், ஓயாமரி மற்றும் கோணக்கரை ஆகிய
பகுதியில் நவீன எரிவாயு தகன மேடை தொடர்ந்து செயல்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.ஆணையர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments