திருச்சி மாநகரம் கருமண்டபம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரளாவில் இருந்து மீன் லோடு இறக்கிவிட்டு வந்த, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்த பாபு (41) என்பவரிடம் இருந்து, முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், 1 லட்சத்து 92 ஆயிரத்து 160 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போன்று திருச்சி சஞ்சீவி நகர் ஓயாமரி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூபாய் 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments