திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் சிஐடியு ஆட்டோ சங்கத்திலிருந்து பிரிந்து இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் என்ற புதிதாக நிறுவிய போது கடந்த மாதம் இரண்டு ஆட்டோ சங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் சமயபுரம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி
போலீசாரை கண்டித்து இன்று சமயபுரம் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர் திட்டமிட்டு இருந்தனர். இதனை அறிந்த சமயபுரம் போலீசார் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடத்தக்கூடாது என கூறிய போது போலீசாருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் பாண்டியன், மாவட்ட அமைப்பாளர் குழந்தைவேல் உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் 40க்கும் மேற்பட்டோரை சமயபுரம் போலீசார் கைது செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments