திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்துக்கு பின்புறம் (வண்ணாங் கோவில்) பகுதியில் வசித்து வருபவர் சந்துரு. இவர் நியாயவிலைக் கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ப்ரியா (24) என்ற மனைவியும் நட்சத்திரா (3) என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவதும் மனைவி ப்ரியா கோபித்துக்கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு செல்வது வழக்கம் இது போன்று அடிக்கடி குடும்பத்திற்குள் சண்டை நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் வழக்கம்போல் சந்துரு பணிக்கு சென்ற நிலையில் சந்துருவின் வீட்டில் இருந்து அதிக அளவு புகை வெளியே வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரியா மற்றும் குழந்தை நட்சத்திரா கருகிய நிலையில் கிடந்த உள்ளனர். இதுகுறித்து ராம்ஜி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் தாய், மகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று வயது குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments