திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மருதூரைச் சேர்ந்த சரோஜா. இவரது உறவினர் இறப்பு நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் நாத்தார்மங்கலம் சென்றிருந்தார். இதனையடுத்து இன்று பெரம்பலூரிலிருந்து சரோஜா, மகன் தனபால், சகோதர் ராமசாமி, சகோதர் மகன் விஷ்ணு ஆகிய நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் திருச்சி வந்தனர்.
இந்நிலையில் இருங்களூர் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ராமசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 9 வயது சிறுவன் தனபால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தனபாலின் தாய் சரோஜா (35) படுகாயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், சரோஜாவின் அண்ணன் ராமசாமி (48), இவரது மகன் விஷ்ணு (15) படுகாயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW
Comments