திருச்சி ஒத்தக்கடையில் இருந்து கான்வென்ட் சாலை எப்பொழுதும் பரபரப்பாக இயங்கக் கூடியது. அப்பகுதியில் ஐந்துக்கு மேற்பட்ட பள்ளிகள், வணிக நிறுவனங்கள், விடுதிகள், ஏராளமான கடைகளும் உள்ளது.

மிக முக்கியமாக காலையில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் மற்றும் ஆட்டோ,வேன் உள்ளிட்டவைகள் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டும். மேலும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் கான்வென்ட் சாலையை கடக்க வேண்டும்.

மிக முக்கியமாக கான்வென்ட் சாலையில் வணிக நிறுவனம் உள்ள பகுதியில் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி வைத்து பழுது பார்ப்பது, அங்குள்ள கார் மற்றும் உறுதி உதிரி பாகங்கள் உள்ள கடைகளுக்கான வாகனங்கள் என அனைத்தும் சாலையில் நிறுத்தப்படுகிறது. இரண்டு ஆட்டோக்கள் அல்லது இரண்டு கார்கள் எதிரெதிரே வந்தாலே அப்பகுதி போக்குவரத்தினர் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
இதனால் தினமும் சண்டை சச்சரவுக்கு அந்த சாலை குறைவில்லாமல் உள்ளது. வாகன ஓட்டிகள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதும் கடையில் உள்ளவர்களை திட்டுவது என தினமும் வாக்குவாதத்துடன் அந்த சாலையை அனைவரும் கடக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையை போக்குவரத்து நெரிசலில் இருந்து பாதுகாக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?
காலையில் நிறுத்தி வாகனங்களை சரி செய்வது உதிரி பாகங்கள் வாங்கும் வரும் நான்கு சக்கர வாகனங்களில் சாலையிலேயே நிறுத்தினால் எப்படி பொதுமக்கள் அந்த சாலையை கடப்பார்கள்? என்ற கேள்வி காவல் துறையினருக்கு பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.

போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டுநர்களையும் பொதுமக்களையும் காப்பாற்ற வேண்டும்.தற்பொழுது பள்ளி விடுமுறை நாட்கள் இருந்தும் நெரிசலில் இச்சாலை சிக்கித் தவிக்கிறது.ஜூன் இரண்டாம் தேதி பள்ளி திறந்தவுடன் அந்த சாலையை கடப்பதே பெரிய சாகசம் செய்வது போல் உள்ளது என வாகன ஓட்டிகளின் புலம்பல் தொடர்கிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
13 Jun, 2025
388
17 May, 2025










Comments