திருச்சி மாநகரில் தினமும் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலில் விபத்தை தடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் திருச்சி மாநகர போக்குவரத்து போலீசார், திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதி, காந்தி ரோடு, அம்மா உணவகம், சார்பதிவாளர் அலுவலகம், திருச்சி E.R. பள்ளி உள்ளிட்ட இடங்களில் ரப்பர் வேகத்தடைகளை தற்காலிமாக அமைத்துள்ளனர்.
தற்போது அந்த பகுதியில் கடந்து செல்லும் கனரக – வாகனங்கள் உட்பட பல வாகனங்களின் பாரம் தாங்காமல் அதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்க்ரு உள்ள ஆணிகள் வெளியே பெயர்ந்து நீட்டிக் கொண்டுள்ளன. அவற்றை கடந்து செல்லும் வாகன ஒட்டிகளின் டயர்களை பதம் பார்த்து வருகின்றன. வாகன வேகத்தை குறைத்து விபத்தை தவிர்க்க சாலைகளில் குறுக்கே பதிக்கப்பட்டுள்ள ரப்பர் தடுப்புகள் வாகன ஒட்டிகளுக்கு பெரும் இம்சையாக மாறி விட்டது.
உடனடியாக திருச்சி மாநகர காவல் ஆணையர் இதற்கு நடவடிக்கை எடுத்து எப்பொழுதும் போல உள்ள சிமெண்ட் கற்கள், தார் கலந்த வேகத்தடைகளை அமைத்து அதில் வெள்ளை கோடுகளை அடிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments