பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் இன்று தொடங்கியது. கோவில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
டிசம்பர் 12ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது. பன்னிரண்டாம் தேதி பகல்பத்து விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பகல் பத்து விழாவின் பத்தாம் திருநாளான மோகினி அலங்காரம் 22ஆம் தேதியும், இராபத்து திருவிழாவின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 23ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments