Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வாக்கு சாவடியில் மேற்கொள்ள  வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் ஆய்வு

வாக்கு சாவடியில் மேற்கொள்ள 
வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் பொதுத்தேர்தல்-2021 அடுத்த மாதம் ஏப்ரல் 6ம்  தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர்கள் வாக்குபதிவு செய்வதற்காக மாநகரிலுள்ள வாக்குசாவடிகள் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக திருச்சி கருமண்டபம் ஓம் மாருதி மெட்ரிக் பள்ளி,  ராம்ஜி நகர் உமா பரமேஸ்வரி நடுநிலைப்பள்ளி, மேலப்புதூர் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,   கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளி மற்றும் கருமண்டபம் கலைமகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய தேர்தல் வாக்குபதிவு சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்தார்கள்.

ஆய்வின் போது கண்டோன்மெண்ட் சரக உதவி ஆணையர் மற்றும் பள்ளி நிர்வாக அலுவலர்களுடன் கலந்துரையாடினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *