திருச்சி ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கனரா வங்கியில் நகையை அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் பெற்று சென்ற பிரியங்கா என்பவரை பின்தொடர்ந்த உள்ளார் மர்ம நபர். வீட்டின் அருகே வாகனத்தை நிறுத்தும் பொழுது பிரியங்காவிடம் அந்த நபர் பணத்தை பறித்துச் சென்றுள்ளார்.
வங்கியிலிருந்து நோட்டமிட்டு பணத்தை பறித்த நபர் குறித்த சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வங்கியில் இருந்து அடகு வைத்த நகை கடன் பணத்தை எடுத்து வந்த பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இது ஸ்ரீரங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO
Comments