திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மும்முடி சோழமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திபாலன் (34). இவர் தனது இருசக்கர வாகனத்தை லால்குடி பேருந்து நிலையத்தத்தில் உள்ள ஒரு கடை முன்பு நிறுத்திவிட்டு சொந்த வேலையாக வெளியே சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சக்தி பாலன் பல்வேறு இடங்களில் பைக்கை தேடி உள்ளார். ஆனால் பைக் கிடைக்கவில்லை. இது குறித்து லால்குடி காவல் நிலையத்தில் சக்திபாலன் புகார் அளித்தார். புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments