Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு NAAC A+ அங்கீகாரம்

No image available

திருச்சியில் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான சாரநாதன் பொறியியல் கல்லூரி 1998-ல் வித்யா சேவவரத்தினம் குரு சேவா மணி ஆடிட்டர் சந்தானம் அவர்களால் நிறுவப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும். 

சமீபத்தில் இக்கல்லூரி NAAC அங்கிகாரம்   பெறவேண்டி முதன் முறையாக விண்ணப்பித்தது அதனையொட்டி  தலைவர் உறுப்பினர், செயலாளர் மற்றும் தரமான மதிப்பீட்டிற்கான ஒரு  உறுப்பினர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு ஏப்ரல் 8 மற்றும் 9 தேதிகளில் கல்லூரி வளாகத்திற்கு சென்று நிறுவனத்தை மதிப்பீடு செய்து மொத்தத்தில் அதிகபட்சம் 4 க்கு  3.27 புள்ளிகளை வழங்கி NAAC A+ மதிப்பீட்டில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இதனைக் குறித்து கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி. வளவன் கூறுகையில்… இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள்  மற்றும் அலுவலக உறுப்பினர்கள் எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

30 சதவீத புள்ளிகள் குழுவின் நேரடி ஆய்வு மதிப்பீட்டை அடிப்படையாக கொண்டவை என்றாலும், மீதமுள்ள 70 சதவீதம் ஆய்வு குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய முழுமையான சுய ஆய்வு அறிக்கை மற்றும் அங்கீகாரத்திற்கான கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டது. சாரநாதன் பொறியியல் கல்லூரியின் பாடத்திட்ட அம்சங்களிலும்  உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் வளங்களிலும்  அதிக புள்ளிகளைப் பெற்று இக்கல்லூரியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கற்றல், கற்பித்தல் முறையை அளவுகோலாக  அளவிடக்கூடிய விளைவுகளாக மாற்றியமைத்த கல்லூரியிலேயே உருவாக்கப்பட்ட மென்பொருள் பற்றிய இந்த ஆய்வுக்குழு பாராட்டி ஒரு சிறுகுறிப்பு கொடுத்தது.

இந்த மென்பொருள் பற்றி இந்த ஆய்வுகள் ஒவ்வொரு கற்பித்தல் கற்றல் செயல்பாட்டிற்கு சாதகமான விளைவுகளை உறுதி செய்கிறது. இந்த அங்கீகாரத்தின் மூலம் தன்னாட்சி அந்தஸ்து பெறுவதற்கு கல்லூரிக்கு உதவும் தற்போது கல்லூரியில் உள்ள ஏழு பொறியியல் துறைகளில் ஆறு தகுதியான துறைகள் ஏற்கனவே NBA அங்கீகாரம் பெற்றவை என்று தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *