தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் நாகப்பட்டினம் மாவட்டம் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா (02.12.2024) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி (11.12.2024) அன்று சந்தனகூடு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாகூர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வருகைதர உள்ளனர். அதனை முன்னிட்டு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்கவும், போக்குவரத்துத்துறை அமைச்சர் வழிக்காட்டுதலின்படி நடைபெற உள்ள கந்தூரி திருவிழாவினை முன்னிட்டு (01.12.2024) முதல் (12.12.2024) வரை சென்னை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிதம்பரம், இராமநாதபுரம், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்தும், நாகப்பட்டினம் – நாகூர் மற்றும் காரைக்கால் – நாகூர் வழித்தடத்திலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், தற்காலிக வாகன நிறுத்தம் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திலிருந்து நாகப்பட்டினம் தொழிற்பயிற்சி நிலைய மைதானம் (ITI GROUND), MODEL SCHOOL வாகன நிறுத்தம், வெண்ணாற்றாங்கரை வாகன நிறுத்தம் மற்றும் இரயில் நிலையம் ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் வட்டப்பேருந்து இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தினசரி இயக்கப்பட்டு வரும் 127 பேருந்துகள் வாயிலாக 335 நடைகளுடன் (02.12.2024) அன்றும், (11.12.2024) அன்றும் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை ஒருங்கிணைக்க நாகூர் மற்றும் நாகப்பட்டினம் பேருந்து நிலையங்களில் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இச்சிறப்பு பேருந்து சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments