திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஐல்லிகட்டு ராஜேஷ் போட்டியிடுகிறார். நாள்தோறும் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர் ஜல்லிகட்டு ராஜேஷ், பிறந்து வளர்ந்த சொந்த மண்ணான உறையூர் பகுதியில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது சாலையோர வியாரிகளுக்கு உதவும் வகையில் வாழைப்பழம் வியாபாரம் செய்தார். வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் அமோக ஆதரவு அளித்தனர். நிகழ்வில் பிரபு தனபால், மாநகர் மாவட்ட செயலாளர் நிசார் அஹமத், சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் வைத்தீஸ்வரன், மேற்கு மாவட்ட தலைவர் குமரய்யா, மேற்கு மாவட்ட செயலாளர் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments