மத்திய மண்டல டி.ஐ.ஜி வருண் குமார் குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலை தளங்களிலும், பொது வெளியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டி.ஐ.ஜி. வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் அவரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் மூலம் வழக்கு தொடரத்துள்ளார்.
அந்த வழக்கிற்காக நீதிபதி உத்தரவின் அடிப்படையில் டி.ஐ.ஜி. வருண்குமார் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி (பொறுப்பு) பாலாஜி முன்பு நேரில் ஆஜராகினார். அவரிடம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன்னுடைய கடமையை செய்ததற்காக தன்னை குறித்தும் தன் குடும்பத்தினர் குறித்தும் அவதூறாகவும் ஆபாசமாகவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர்.
மேலும் பொதுவெளியிலும் எங்கள் குறித்து பேசினார் குறிப்பாக ஜாதி உள்ளிட்டவை குறித்து பகிரங்கமாக பொதுவெளியில் சீமான் பேசினார். மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் பேசியுள்ளார் என்பது குறித்து விரிவான வாக்குமூலத்தை அளித்தார். அதனை நீதிபதி பாலாஜி முழுமையாக பதிவு செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு ஜனவரி மாதம் 7 ஆம் தேதிக்கு விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில் டி.ஐ.ஜி வருண் குமார் நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார்.
இந்நிலையில் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்த நிலையில் அந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் நடைபெற்றது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலாஜி வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், அன்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments