திருச்சி மாவட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி மகள் திரிஷா என்பவரும் கடந்த 1 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்ததாகவும், கடந்த 14 ஆம் தேதி காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, மதுரைக்கு சென்றுள்ளனர்.
பின்னர் மதுரையில் உள்ள இலுப்பைகுளத்தில் கண்ணன் என்பவரது வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி சொரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருணகிரி, சாமிக்கண்ணு, கார்த்திக், பிரவீண்குமார் மற்றும் இரண்டு நபர்கள், இலுப்பைகுளத்திற்கு சென்று காதலர்கள் இருவரையும், வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி தாக்கியுள்ளனர்.
அருணகிரி என்பவர், காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சந்தோஷை சாதி ரீதியாக அசிங்கமாக திட்டி, கையால் அடித்து, உயிர்நிலையில் உதைத்துள்ளார். அருணகிரிவுடன் சென்றவர்களும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
மேலும் சந்தோஷிடம் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் அவரது செல்போனை பறித்து கொண்டு, சந்தோஷின் பெற்றோரை, மோர்னி மலை பகுதிக்கு வர சொல்லி, அவர்களுடன் அனுப்பி வைத்துவிட்டு, மீண்டும் சந்தோஷ் வீட்டிற்கு சென்று, அவரை அடித்து உதைத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக வளநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காதலர்களை தாக்கிய அருணகிரி, சாமிக்கண்ணு, கார்த்திக், மற்றும் பிரவீண்குமார் ஆகியோரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலர்களை தாக்கிய அருணகிரி என்பவர் சமீபத்தில் தான், வழக்கறிஞராக பதிவு செய்துள்ளதாகவும், மேலும் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக பதவி வகித்து வருவதாகவும் தெரிய வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments