Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

10 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை பறிமுதல்

தமிழகத்தின் பல பகுதிகளில் சிலைகளை திருடி தொன்மையான சிலைகள் எனக்கூறி ஏமாற்றி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் திருச்சி சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் பிரோமா சாந்தகுமாரி சார்பு ஆய்வாளர்கள் ராஜேஷ், பாண்டியராஜன்

தலைமை காவலர்கள் பரமசிவம் மற்றும் சிவபாலனாகர் அடங்கிய தனிப்படையினர் கோயம்புத்தூர் சென்று தகவலாளி மூலமாக சிலை வாங்குபவர்கள் போன்று பேசி சிலையை கோயமுத்தூருக்கு கொண்டு வருமாறு கூறினர். அதன்படி நேற்று (06.11.2022) அதிகாலை 5 மணி அளவில் கோவையிலிருந்து பல்லடம் செல்லும் மெயின் ரோட்டில் இருகூர் பிரிவில் காத்திருந்தபோது கேரளா மாநில பதிவு எண் கொண்ட சொகுசு  காரில் வந்தவர்களை தனிப்படை போலீசார் நிறுத்தி விசாரித்தனர்.

இதில் காரை ஓட்டி வந்தவர் மேட்டூரைச் சேர்ந்த ஜெயந்த்  (22), காருக்குள் அமர்ந்திருந்த மற்றொரு நபர் கேரளா மாநிலம் பாலக்காடைச் சேர்ந்த சிவப்பிரசாத் நம்பூதிரி (53) எனவும் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து காரை சோதனை செய்தபோது அந்த காரின் பின்னால் வெள்ளை நிற சாக்கு பையில் சுருட்டிய நிலையில் சுமார் 3 அடி உயரம் உள்ள திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோக சிலையை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த சிலையை பற்றி அவர்களிடம் விசாரித்த போது நடராஜர் சிலையை காரில் கொண்டு வந்ததற்கு தக்க முகாந்திரம் கூறாமல் சந்தேகிக்கும் படியாக முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளனர்.

இருவரும் நடராஜர் உலக சிலை தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பழமையான கோவிலில் திருடி மறைத்து வைத்திருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கிடைத்து விற்பனை செய்வதற்காக காரில் எடுத்து வந்துள்ளார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நடராஜர் உலக சிலை மற்றும் இருவரையும் காவல் ஆய்வாளர்கள் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சிலை மற்றும் இருவரையும் கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட நடராஜர் சிலை 10 கோடி ரூபாய் மதிப்பு என அதிகாரிகள் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *