திருச்சி தேசிய கல்லூரியின் வரலாற்று துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பிரபாகரன், கலையரசன் மற்றும் முன்னாள் மாணவர் கருணாகரன் ஆகியோர் ஸ்ரீரங்கம் ஏகாதசி திருவிழாவில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மூலம் தங்கள் இன்டர்ன்ஷிப்பை முடித்துள்ளனர்.
டிசம்பர் 22 முதல் ஜனவரி 12 ,2023 வரை 22 நாட்களுக்கு பணியாளர்களாக செயல்பட்டனர்.
மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி உதவி தொகையாக 8000 ரூபாய் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
மாணவர்களின் முயற்சியை கல்லூரி செயலாளர். ரகுநாதன், கல்லூரி முதல்வர் குமார்,வரலாற்று துறை தலைவர் பேராசிரியர் கோடைநிலா ஆகியோர் மாணவர்களுக்கு தங்களுடைய பாராட்டை தெரிவித்தனர்.
#திருச்சிவிஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments