Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

எழுத்தறிவின்றி ஒரு குடிமகன் இருந்தாலும், அந்நாடு உண்மையான மக்களாட்சி பெற்றதாகாது -தேசிய கல்வி தினம்(நவம்பர்-11

கல்வி கற்றால்தான் தனக்கும், தன் வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மைகள் செய்ய முடியும். எனவே தான், கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என நன்னுால் அறிவுறுத்துகிறது.

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், மிகச்சிறந்த கல்வியாளரும், முதல் கல்வி அமைச்சருமான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான நவ., 11ம் தேதி, அவரை கவுரவிக்கும் பொருட்டு தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. 

அபுல் கலாம் ஆசாத்தை, கல்விப் பேரரசு என மகாத்மா காந்தி அழைத்தார். எழுத்தறிவின்றி ஒரு குடிமகன் இருந்தாலும், அந்நாடு உண்மையான மக்களாட்சி பெற்றதாகாது என்பது ஆசாத்தின் கருத்து.

கல்வி ஒரு அற்புத மந்திரம்

கல்வி… அதனிடம் எது வேண்டும் எனக் கூறினாலும் உடனே கிடைக்கும். படிப்பும், எழுத்துமிருந்தால் நல்ல பெயர் கிடைக்கும். நல்ல வேலைவாய்ப்பு மட்டுமின்றி, புதிய உலகையும் படைக்கலாம். எழுத்தறிவு பெற்றவன், புதிய பிறவி பெற்றவன் ஆகிறான். மின்சக்தி இல்லாத கிராமங்களில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்திலும் படித்து வாழ்வில் முன்னேறிய தலைவர்கள் உண்டு.

தினமும் பல கி.மீ., துாரம் நடந்து பள்ளி சென்று கல்வி பயின்று செழிப்பு எய்தியோர் இன்றும் உள்ளனர். இன்று இருக்கும் ஆரம்பக் கல்வி பலருக்கு அன்று கிடைக்கவில்லை. ஆனால் இன்றும் கல்வி பயிலாதவர் உள்ளனர். அடிப்படை கல்வி ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான இவர் இந்தியாவின் அறிவியல் வளர்க்சிக்கு முக்கிய காரணமான CSIR அமைப்பை தோற்றுவித்தார். அதே போல ஐ.ஐ.டி.க்கள் இவரின் சிந்தனையில் உருவானதே. பல்கலைக்கழக மானியக்குழுவும் இவரால் உருவாக்கப்பட்டது. ஆரம்பக்கல்வியை எல்லாருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார் ஆசாத். 

உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தாம் பாரத ரத்னா விருது தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் மறுத்துவிட்டார். அவர் மறைந்த பிறகு இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

 ‘அரிஸ்டாட்டில்,பிளாட்டோ பிதாகரஸ் ஆகிய மூவரின் திறமையும்

ஒன்றாக இணைந்த கற்றலின் பேரரசர் அவர் !” என்று காந்தி குறித்த அவரின்

பிறந்தநாள் தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

 

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvisionn 

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *