Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி

திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ. விசுவநாதம் பள்ளியில் இந்திய சிலம்ப கோர்வை மற்றும் உலக இளையோர் சிலம்ப சம்மேளனம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது இதில் 360 க்கும் மேற்பட்ட சிலம்ப விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்றனர்

சிலம்ப வீரர்கள் அனைவரும் தனிதிறமை மற்று சிலம்ப கம்பு சன்டையில் போட்டியிட்டனர்

போட்டியை திருச்சி திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் செயலர் ஸ்ரீமத் சுவாமி சத்யானந்தர் மற்றும் ஜீ.வி.என் ரிவர்சைட் இயக்குனர் டாக்டர் வீ.ஜே.செந்தில் ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்கள்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவில் வசிக்கும் மலேசிய சிலம்பக் கோர்வை கழக நிறுவன மாஸ்டர் அன்பழகன் மற்றும் சிங்கப்பூர் சிலம்ப கோர்வை கழகத்தின் சார்பாக அன்பா மாஸ்டர் அவர்களும் தனிதிறமை போட்டியினை துவங்கி வைத்தனர்.

ஜீ.வி.என். மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வீ.ஜே.ஜெயபால் அவர்கள் மற்றும் டால்மியா வாழ்நாள் இயக்குனர் கோபால்சாமி, நேஷ்னல் கல்லூரி புரபசர் முனைவர் மாணிக்கம் அவர்களும் தொடுமுறை கம்பு சன்டை போட்டியினை துவங்கி வைத்தார்கள். முன்னதாக நிகழ்வின் தொடக்கமாக மணப்பாறை ஸ்ரீவாரி சதங்கை நாட்டியாலயா செல்வி.ஹரிணி ராஜன்பாபு குழுவினரின் பரதநாட்டியம் நிகழ்த்தினார்கள். அதனைத்தொடர்ந்து பரதக் கலைஞர்கள் செல்வி.ஹரிணி, செல்வன்.அரவிந்த், செல்வி.ஜோன் மேனகா ஆகிய மூவருக்கு “பரதக் கலா ரத்னா” விருதுகளை மருத்துவர்.செந்தில் குமார் வழங்கி சிறப்பித்தார்.

கலைக் காவிரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் அவர்களுக்கு திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண குடில் தபோவனம் சுவாமிகள் “சொல்லேர் உழவர் “விருது வழங்கி வாழ்த்தினார்கள்.

போட்டியில் வெற்றி பெற்ற சிலம்ப வீரர்களுக்கு கோப்பை, மெடல் மற்றும் சான்றிதழ்கள் கொடுக்கபட்டன.

ஒட்டு மொத்த முதலாவது சேம்பியன் பட்டத்தை திருச்சி சிலம்ப வீரர்களும் இரண்டாவது சேம்பியன் பட்டத்தை மயிலாடுதுறை அணியும் மூன்றாவது சேம்பியன் பட்டத்தை சீர்காழியும் பெற்றனர்.

வரும் டிசம்பர் மாதம் சர்வதேச சிலம்ப போட்டி நடைபெறுவதற்கான புரிந்துனர்வு ஒப்பந்தம் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் சிலம்ப தலைவர்கள் கையெழுத்து இட்டனர் சர்வதேச சிலம்ப போட்டியை உலக இளையோர் சிலம்ப சம்மேளனம் இணைந்து நடத்துவது எனவும் தீர்மானம் செய்யப்பட்டது.

சிலம்ப போட்டியை தமிழ்நாடு சிலம்ப கோர்வைக் கழகத்தின் துணைத் தலைவர் என்.கே.ரவிச்சந்திரன், ப.ராஜ்குமார், கி.ஆ.பெ. பள்ளி விளையாட்டு ஆசிரியர் முத்துக்குமார் மற்றும் பிரியா ஆகியோர் சிறப்பாக நடத்தினார்கள்

சிறப்பு விருந்தினராக திருச்சி கிழக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கொடுத்து வாழ்த்துகையில்

சங்கத் தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்ப கலை உயிர்ப்புடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தான் கற்ற கலையை சிந்தாமல் சிதறாமல் அடுத்த தலைமுறைக்கும் கற்றுத் தரும் சிலம்ப ஆசான்களுக்கு வாழ்த்து தெரிவித்து அனைத்து துறைகளையும் சிறப்பாக நிர்வகிக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் சிலம்ப கலைக்கு

அதி முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரசு வேலைவாய்ப்புகளில்

3 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தது மட்டுமில்லாமல் 

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பயிற்சி மைதானம் அமைத்து தரப்படும் என்று அறிவித்ததையும் நினைவூட்டி 

நடக்கவிருக்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஏற்பாடுகளையும் சிரமேற்கொண்டு நடத்தி வருவதையும் பெருமையுடன் எடுத்துக்கூறி வெற்றி பெற்றவர்களை மென்மேலும் பல சிகரங்களைத் தொட்டுத் தொடர வாழ்த்தினார்

போட்டியில் கலைக்காவேரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார், சை.சற்குணன், கலைசெல்வன் மற்றும் நிர்வாகிகள் சிலம்ப வீரர்-வீராங்கனைகள் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *