கரோலின்
மாணவ பத்திரிக்கையாளர்
மாறி வரும் உலக சூழலுக்கேற்ப நம் வாழ்க்கை முறைகளும் அன்றாடம் சில மாறுதல்களை மேற்கொண்டு வருகிறது.
வளர்ந்த மேற்கத்திய நாடுகளின் பக்கங்களை நாம் தவறாமல் பின்பற்றுகிறோம். அதன் விளைவாக புதிய நோய்களையும் நோயாளிகளையும் சந்தித்தோம் சந்தித்துக்கொண்டும் இருக்கிறோம் .
உணவே மருந்து என்ற முதுமொழி மருந்தே உணவு என்னும் புதுமொழியாக புணர்ந்து விட்டது. மலையில் வளரும் தாவரங்கள் முதல் நிலத்தடியில் விளையும் கிழங்குகள் வரை அனைத்திலும் நம் பேராசைக்காக
நச்சுகளை விதைத்து விட்டோம், விளையும் நஞ்சையே உண்கிறோம். இதனால் தான் நம் நோய் எதிர்ப்பு சக்தி
குறைந்து கொரோனா போன்ற நோய்களோடு போராடிக் கொண்டிருக்கிறோம் .
சில வருடங்களுக்கு முன்பு நம் அன்றாட உணவாக இருந்த கேழ்வரகு , சாமை,கொள்ளு , கம்பு போன்ற சிறுதானியங்கள் உடல்நலத்தை சீராக வைத்திருக்க உதவியது . ஆனால் இன்று நாகரிகம் எனக் கருதி அவற்றை
சாப்பிடாமல் தவிர்க்கின்றோம். ஆடம்பர இயந்திரங்கள் அத்தியாவசியமாகி விட வேலை பளு குறைந்து நோய்கள் பெருகின. மேலும் கணினி போன்ற மின்னணு சாதனங்களை அதிக நேரம்
பயன்படுத்துவதினால் மன அழுத்தம் உண்டாகிறது. இத்தகைய சூழ்நிலை நம்
உடல்நிலைக்கும் மனநிலைக்கும் சுகாதாரமற்றது , எனவே நாம் சிறிது பின்னோக்கி சென்று பழைய உணவு முறைகள் மற்றும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறைகளை பின்பற்றினால் `நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்னும் பொன்மொழிக்கேற்ப ஆரோக்கியமாக வாழலாம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
Comments