திமுக கூட்டணி கட்சிகளை இழுக்க நயினார் நாகேந்திரன் கொக்கி போடுகிறார். எங்கள் கூட்டணியிலிருந்து யாரும் வெளியேற மாட்டார்கள். -திருச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
திருச்சி கிராப்பட்டி மற்றும் கே.கே. நகர் பகுதிகளை சேர்ந்த பொது மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே .என் .நேரு தலைமையில் நடைபெற்றது..இதில் அமைச்சர் பட்டாக்களைபயனாளிகளுக்குவழங்கினார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்,கே.என்.நேரு :-தமிழகம் முழுவதும் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கக்கோரிமனுக்கள் பெறப்பட்டது.மனுக்களை ஏற்று தகுதியில்ல விண்ணப்பதாரர்களுக்குபட்டாக்கள் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டுள்ளது திறக்கப்பட்ட தண்ணீர் கடை மடை வரை செல்ல தூர் வாரும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது.இதன் மூலம் 6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை.குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மணல் கலந்து வந்தது அதுவும்உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு வரும் திட்டங்களை மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு மாற்றி விட்டதாக ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.என். நேரு,அவர் கூறுவதில் உண்மை இல்லை அவர் சொல்வது போலதிட்டங்களை மாற்ற முடியாது என்றார்.திமுக கூட்டணியின் அங்கம் வகிக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும் என நயினார் நாகேந்திரன் பேசியுள்ளது குறித்த கேள்விக்குஅவர்கள் கூட்டணியில் இருந்து பல கட்சிகள் எங்களோடு கூட்டணி சேர காத்திருக்கிறார்கள்.இதுவரை அவர்களால் அவர்கள் கூட்டணியை இறுதிப்படுத்த முடியவில்லை.எங்கள் கூட்டணியில் இருந்து கட்சிகளை இணைக்கும் முயற்சியில் நயினார் நாகேந்திரன் ஈடுபடுகிறார் .
அவர் கொக்கிப்போட்டு பார்க்கிறார். எங்கள் கூட்டணியில் இருந்து யாரும் வெளியேற மாட்டார்கள்.அமித்ஷா வருகை பார்த்து திமுக பயந்துவிட்டது என மத்திய அமைச்சர் எல். முருகன் பேசி இருப்பது அவர் அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக பேசியுள்ளார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து முதலமைச்சர் பார்த்துக்கொள்வார் என்றார்.இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments