அரசு நிறுவனமான நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (NCL) சமீபத்தில் பயிற்சி ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆள்சேர்ப்பின் மூலம், மொத்தம் 1,140 பயிற்சியாளர் பணியிடங்கள் ஆள்சேர்ப்பு செய்யப்பட்ட உள்ளன.
நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் பயிற்சி ஆள்சேர்ப்புக்கான விண்ணப்பத்தை அக்டோபர் 5, 2023 அன்று தொடங்கும். விண்ணப்பம் ஆன்லைனில் வெளியீடு செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். விண்ணப்பதாரர்கள் NCLக்கு 15 அக்டோபர் 2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அதாவது கடைசி தேதி அக்டோபர் 15 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பை நன்றாக படித்துவிட்டு பூர்த்தி செய்யவும், தவறாக நிரப்பப்பட்ட படிவம் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதால் கவனமாக விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.
மின்னணு இயந்திரங்களுக்கான 13 பணியிடங்கள், எலக்ட்ரீசியன் பணியிடங்கள் 370, ஃபிட்டர்கள் 543, வெல்டர்கள் 155, ஆட்டோ எலக்ட்ரீஷியன்கள் 12, மோட்டார் மெக்கானிக்கள் 12 என மொத்தம் 1, 140 அப்ரண்டிஸ் பணியிடங்கள் தேர்வு செய்யப்படவுள்ளன.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 26 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 31 ஆகஸ்ட் 2023ஐ அடிப்படையாகக் கொண்டு வயது கணக்கிடப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். அதே நேரத்தில், OBC, EWS, SC, ST மற்றும் இடஒதுக்கீடு பிரிவினரும் அரசு விதிகளின்படி தளர்வு பெறுவார்கள்.
10வதில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் ஐடிஐ தகுதியின் அடிப்படையில் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் இந்த ஆள்சேர்ப்பு தொடர்பான கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் அணுக வேண்டிய அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nclcil.in/ இதற்குப் பிறகு ஆள்சேர்ப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும். பிறகு தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும் உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கவும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
இதன் பின் உங்கள் கட்டணத்தைச் செலுத்துங்கள். இறுதியாக, படிவத்தின் நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள் நாளை ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் பயனுள்ளதாக இருக்கு.
ஆல் தி பெஸ்ட் !!!
Comments