திருச்சி திருவானைக்கோவிலை பூர்வீகமாக கொண்ட. ராஜகோபால் பெரம்பலூரில் வசித்து வருகிறார்.ராஜகோபால் உணவகம் ஒன்றில் வேலை செய்கிறார்.மாதம் பத்தாயிரம் வருமானத்தில் குடும்பம் நடத்தி வரும் இவரால் இரு பெண் குழந்தைகளின் கல்வி கட்டணம் ரூ.30,000 கட்ட முடியாத சூழலில் லண்டன் மாநகர திமுக ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தொடர்பு கொண்டார்.
லண்டன் செந்தில் ஏற்பாட்டில் ஓமன் திமுக அயலக அணி நிர்வாகி நவநீதகிருஷ்ணன் மாணவி நிரோஷாவின் கல்வி கட்டணத்தையும்,ஸ்ரீவர்னிகாவின் கல்வி கட்டணத்தை லண்டன் செந்தில்,மலேசியா அயலக திமுக நிர்வாகி அறந்தை இளங்கோவன்,பஹ்ரைன் அயலக திமுக நிர்வாகி சோமு.சண்முகநாதன் ஆகியோர் செலுத்தினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments