திருச்சி உய்யகொண்டான் கால்வாய் பகுதியில், ஆறுகண்ணு சாலையில் அமைந்திருக்கும் ஸ்டேட் பங்கேர்ஸ் காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய இறகுபந்து மைதானம் (Badminton Court) மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான முதற்கட்ட கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது. இத்திட்டமானது பொது – தனியார் கூட்டாண்மை முறையை (Public Private Partnership mode) பின்பற்றி புதிய பூப்பந்து மைதானம் அமையவுள்ளது.
இத்திட்டத்திற்கு சுமார் 31 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் / தன்னார்வலர்கள் பங்களிப்பாக ரூபாய் 15 லட்சம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியிடம் வழக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைப்பற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்…..இந்த மைதானமானது சுமார் 1 மாதத்திற்குள் கட்டிமுடிக்கப்படும்.
இம்மைதானத்தில் பெட்டகம் அறை வசதி, கழிவறை வசதி, பார்க்கிங் வசதி ஆகிய அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன. இந்த புதிய இறகுபந்து மைதானமானது வருகின்ற 2023 ஜனவரியில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பாக்கபடுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments