திருச்சிராப்பள்ளி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் 42 மையங்களில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டம் இனிதே அனைத்து மையங்களிலும் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் 860 பேர் பயில உள்ளனர். இத்திட்டம் தந்தை பெரியார் நகராட்சி தொடக்கப்பள்ளி அழகிரிபுரத்தில் 12 பேரைக் கொண்டு அந்தநல்லூர் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் கா. மருதநாயகம் தலைமையில் தொடங்கப்பட்டது. இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குடியிருப்பு பகுதியில் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாத ஆண், பெண் இருபாலருக்கும் தங்கள் கையெழுத்து தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர் எழுத பயிற்சி கொடுக்கப்பட்டது. மையத்தின் தன்னார்வலர் ஆனந்தி பயிற்சியாளராக செயல்பட உள்ளார். தலைமை ஆசிரியர் மல்லிகா தேவி அனைவரையும் வரவேற்று உபசரித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments