திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி மால்வாய் ரோட்டில் வசிப்பவர் தர்மராஜ் (73). இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் இன்று புதிதாக வாங்கிய தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லக்குடி சுங்கச்சாவடி அருகில் அமைந்துள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக வந்துள்ளார்.
அப்போது திருச்சி பர்மா காலனியை சேர்ந்த சரவணன் (44) என்பவர் திருச்சியில் இருந்து அரியலூர் நோக்கி தனியார் ஆம்புலன்ஸில் நோயாளிகளை ஏற்றி கொண்டு வந்த போது தர்மராஜ் மீது அதி வேகமாக மோதியது. இதில் தர்மராஜ் சம்பவ இடத்திலே பலியானார்.
தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments