திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயி லின் சிவன் சன்னதி நுழைவாயிலில் பழுதடைந்த மணிக்கு பதிலாக புதிய மணி பொருத்தப்படவுள்ளது.
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் சிவன் சன்னதி நுழைவாயிலில் உள்ள பழமையான பெரிய மணி (12.11.1920) ஆண்டு பொருத்தப்பட்டது. இந்த மணி 30 ஆண்டுகளுக்கு முன்பழுதடைந்ததால் பயன்படுத்த முடியாமல் இருந்தது.
இந்த நிலையில் சாம்பு.சுப்ரமணியன் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகிய உபயதாரர்களால் ரூ.12.50 லட்சம் மதிப்பில் உயரம் 113 செ.மீ, எடை 520 கிலோ, சுற்றளவு 287 செ.மீ கொண்ட புதிய மணி தயார் செய்யப்பட்டு கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மணி வரும் ஜூலை 12 அன்று திருக்கோயிலில் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக கோயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments