திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
முத்தரசநல்லூரில் துணை சுகாதார மையம் மற்றும் உப்பலியபுரம், தண்டலைபுத்தூர் மற்றும் சிறுகாம்பூர் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும், புத்தாநத்தத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
இதனை தவிர பஞ்சப்பூர் மற்றும் அரியமங்களத்தில் நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மறுகட்டமைப்பிற்கு வாய்ப்புள்ள சுகாதார மையங்கள் சீரமைக்கப்படும் என தெரிவித்த சுகாதார அமைச்சர், ஸ்ரீரங்கத்தில் கூடுதல் கட்டட வசதி மேம்படுத்தப்படும் என கூறினார்.
முன்னதாக திருச்சியில் புதிய பல் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனையை அமைக்க அனுமதியளிக்குமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அமைச்சர் கே.என்.நேரு கேட்டு கொண்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments