திருச்சி மாநகர துப்பறியும் நாய்படை பிரிவில் பணிபுரிந்த அகில இந்திய அளவில் தங்க பதக்கம் பெற்ற “டைகர்” துப்பறியும் நாய் ஓய்வு பெற்றதை அடுத்து அதற்கு பதிலாக பிறந்து 83 நாளான புதிய டாபரமேன் நாய்க்குட்டி வாங்கப் பெற்றது.
இதற்கு போதைப் பொருட்களை கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் பயிச்சியாளராக தலைமைக்காவலர்-2286 எட்வின் அமல்ராஜ் மற்றும் காவலர்-250 செந்தமிழன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நாய்க்குட்டிக்கு மூன்று மாதம் அடிப்படை பயிற்சி திருச்சியிலும், அடுத்த ஆறு மாத போதைப் பொருட்களை கண்டறியும் பயிற்சி கோயமுத்தூர் மாநகர துப்பறியும் நாய்படை பயிற்சி மையத்தில் வழங்கப்பட உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments